அயோத்தி ராமர் கோயிலில் இன்று முதல் சிறப்புப் பூஜைகள் தொடக்கம்!
அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை நடைபெறுவதை முன்னிட்டு, இதற்கான சடங்கு பூஜைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை நடைபெறுவதை முன்னிட்டு, இதற்கான சடங்கு பூஜைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமா் சிலை வரும் 22-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில். பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு சடங்கு பூஜைகள் இன்று முதல் தொடங்கியுள்ளதாக கோயில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜன.17ல் ராமர் சிலையின் பரிசார் பிரவேசம் விழா நடைபெறுகிறது. 18ல் ஜல யாத்திரை, தீர்த்த பூஜை, கந்தாதிவாஸ் சடங்குகளும், 19ல் கேசராதிவாஸ், கிருதாதிவாஸ் ஔஷததிவாஸ் போன்ற சடங்குகளும் நடைபெறுகின்றன. அன்று மாலை, தான்யாதிவாஸ் சடங்கு நடைபெறும். 20ம் தேதி காலை ஷர்கராதிவாஸம், பலாத்வாஸ் சடங்குகளும், மாலையில் புஷ்ப தீபம் நடக்கவுள்ளன. 21ல் காலை மத்யாதிவாஸ் மற்றும் மாலை ஷியாதிஸமும் சடங்குகளும் நடைபெறவுள்ளன.