கோப்புப்படம் 
இந்தியா

இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நடந்து வருகிறது: ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நடந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

DIN

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நடந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மணிப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.14) தொடங்கிய நடைப்பயணம், 67 நாள்களில் 15 மாநிலங்களில் உள்ள 110 மாவட்டங்கள் வழியாக 6,713 கி.மீ. தொலைவைக் கடந்து மும்பையில் வரும் மாா்ச் 20-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

ராகுல் காந்தி தற்போது நாகலாந்து மாநிலத்தில் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது.

"இந்தியா கூட்டணியின் நிலை சிறப்பாக உள்ளது. நாங்கள் எங்கள் கூட்டணி கட்சிகளுடன் உரையாடி வருகிறோம். தொகுதி பங்கீடு நடந்து வருகிறது. அதற்கான  விவாதங்கள் நடந்து வருகின்றன. 

அவை நன்றாக செல்கிறது என்று நினைக்கிறேன். அந்த விவாதங்கள் எங்கு முடிவடைகின்றன என்பதைப் பார்க்க வேண்டும் ஆனால் சிக்கலான விவாதங்கள் அல்ல, சிறிய விவாதங்கள் தான். எனவே, அவை விரைவில் தீர்க்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT