கர்நாடகத்தில் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள மன்செனஹள்ளி கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து 8 வயது சிறுவன் உயிரிழந்தான்.
சாலையைக் கடக்கும் போது மின்மாற்றியின் கம்பி தரையில் இருப்பதைக் கவனிக்காத சிறுவன் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
கிராமத்தில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையம் எதிரே இச்சம்பவம் நடந்ததால், அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சாலையை விரிவுபடுத்துவதற்காகத் தோண்டப்பட்ட டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ள இடத்திற்கு மிக அருகில் சிறுவன் சாலையைக் கடக்க வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.