தில்லியில் டிஆர்டிஓ அலுவலகத்தில் தீ விபத்து
தில்லியில் உள்ள பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தில்லியில் உள்ள பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
வடக்கு தில்லியில் இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் இந்த விபத்தில் யாருக்கு காயம் ஏற்படவில்லை. மேலும் தீ விபத்துக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை. அதேசமயம் தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் வடக்கு தில்லி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.