நீட் பயிற்சி பெற்றுவந்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!
லக்னௌவில் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி பகுதியில் 22 வயது மாணவி 9வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
லக்னௌவில் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி பகுதியில் 22 வயது மாணவி 9வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த மாணவி ஸ்ருதி வர்மா. சீதாபூரைச் சேர்ந்த இவர் தனது நண்பர் சுபம் ராயுடன் சுஷாந்த் கோல்ஃப் சிட்டியில் உள்ள செலிபிரிட்டி டெடோஸ் அடுக்குமாடிக் குடியிருப்பு எண் 903இல் வசித்து வந்தார்.
நண்பர்கள் இணைந்து திங்கள்கிழமை இரவு விருந்து நடத்தியுள்ளனர். அப்போது பால்கனியில் இருந்து தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஸ்ருதி நிலைதடுமாறி 9வது மாடியிலிருந்து தவறி விழுந்தார்.
Advertisement
Advertisement
இந்த சம்பவம் நடைபெறும்போது அவரது குடும்பத்தினர் ஸ்ருதியின் நண்பரின் வீட்டில் இருந்துள்ளனர். இதையடுத்து ஸ்ருதியை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் ஸ்ருதி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
லக்னௌவில் தங்கி மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு ஸ்ருதி தயாராகி வந்தார். செவ்வாய்க்கிழமையன்று பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சடலத்தை குடும்பத்தினரிடம் போலீஸார் ஒப்படைத்துள்ளனர். குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.