முகப்பு
இந்தியா

மதச்சார்பற்ற இந்தியா! சீதாராம் யெச்சூரியின் குடியரசு தின விழா பதிவு!

குடியரசு தின விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வலைதளப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:13 PM
சீதாராம் யெச்சூரி
பகிர்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குடியரசு தின விழா வாழ்த்துக்களைத் தெரிவித்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

தனது பதிவில், '1950ல் இதே நாளில் நாம் சுதந்திர இந்தியாவை மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக்கினோம். நமது குடியரசினைப் பாதுகாப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் மீண்டும் உறுதியேற்போம்' எனப் பதிவிட்டுள்ளார். 

மேலும், 'மக்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சோசலிச, மதச்சார்பற்ற, இறையாண்மை கொண்ட, ஜனநாயக இந்தியாவிற்கான போராட்டத்தை முன்னெடுப்போம்' என சிபிஐ(எம்) எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.