புது தில்லி: பொது பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) தயாராகும் உணவு மற்றும் உணவு பொருள்கள் டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, 350 முதல் 400 பணியிடங்களைக் குறைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எளிய அமைப்பு மற்றும் செயல்பாட்டு திறனில் அதிக நிறைவை எட்ட ஸ்விக்கி தனது நிறுவனத்தில் பணியிடங்களின் எண்ணிக்கையைக் கணிசமாக குறைக்கும் திட்டத்தில் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை மற்றும் நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் ஆள் குறைப்பு நடக்கலாம் எனவும் அடுத்த வாரம் முதல் இது நிகழவுள்ளதாகவும் தெரிகிறது.
பிடிஐ சார்பில் ஸ்விக்கியை அணுகியபோது இதற்கு எந்தவித பதிலும் நிறுவனம் அளிக்கவில்லை.
ஸ்விக்கி, தனது பணி செயல்முறைகளை எளிதாக்குவதிலும் செயல்பாடுகளின் திறனை உயர்த்துவதிலும் கவனம் செலுத்துவதாக, நிறுவனத்தை நன்கறிந்த நபர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஆறாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் 2வது நிதியமைச்சர்
தற்போது ஸ்விக்கியில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரம் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. டெலிவரி செய்யும் நபர்கள் பணியாளர்களின் எண்ணிக்கையில் உள்ளடங்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.