மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இரண்டு நாள் மேற்கு வங்க பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்க மாநிலத்தின் 42 நாடாளுமன்றத் தொகுதிகளில் 18-ஐ கைப்பற்றிய பாஜக, வரவிருக்கும் தேர்தலில் 35-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் இலக்குகளை நிர்ணயித்துள்ளது.
இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாள்கள் மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அங்கு மெதினிபூர் மாவட்டத்தில் பொதுக்கூட்டத்திலும் அதனைத்தொடர்ந்து கட்யின் அமைப்புக் கூட்டங்களை நடத்தவும் அவர் திட்டமிட்டிருத்தார்.
தற்போது அமித்ஷாவின் இரண்டு நாள் மேற்கு வங்க பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவரது வருகைக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பாஜக தலைவர் ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.