இந்தியா

பிகாரில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்!

பிகாரில் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க நிதீஷ் குமார் உரிமை கோரியுள்ளார்.

DIN

பிகாரில் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க நிதீஷ் குமார் பிகார் ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளார்.

நிதிஷ் குமார் தனது ராஜிநாமா கடிதத்தை பிகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் இன்று வழங்கினார். பிகார் மாநிலம் பாட்னாவில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் நிதிஷ் குமாருக்கு ஆதரவளிக்க பாஜக எம்.எல்.ஏக்கள் முடிவு செய்தனர்.

இந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை நிதீஷ் குமார் ஆளுநரிடம் வழங்கினார். தொடர்ந்து பிகாரில் ஆட்சி அமைப்பதற்கும்  உரிமை கோரியுள்ளார்.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப் பேரவையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவுக்கு உள்ள 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை பிகார் ஆளுநரிடம் நிதீஷ் குமார் வழங்கினார்.

இன்று மாலையே பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT