காரில் அமர்ந்தபடி மக்களுடன் கைகுலுக்கும் ராகுல் காந்தி 
இந்தியா

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்: 2 நாள்கள் இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடக்கம்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் இரு நாள்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று(ஜன. 28) மீண்டும் தொடங்கியுள்ளது.

DIN

புது தில்லி : மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியிலிருந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் இரு நாள்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று(ஜன. 28) மீண்டும் தொடங்கியுள்ளது.

இதற்காக புதுதில்லியிலிருந்து, இன்று(ஜன.28) காலை, மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் உள்ள  பாக்தோக்ரா விமான நிலையம் வந்தடைந்த ராகுல் காந்தி, தொடர்ந்து   சாலை மார்க்கமாக காரில் பயணித்தார்.  அப்போது,  காரின் மேற்கூரையில் அமர்ந்தபடி, சாலையின் இருபுறமும் சூழந்திருந்த மக்களை பார்த்து கையசைத்தபடி பயணித்தார். அவருடன் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி உடனிருந்தார். 

மணிப்பூரில் இம்மாதம் 14-ஆம் தேதி இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, அசாம் வழியாக கடந்த 25-ஆம் தேதி மேற்கு வங்கம் சென்றடைந்தார்.  அதனைத் தொடர்ந்து 2 நாட்கள் ஓய்வுக்குப் பின் இன்று(ஜன.28) மீண்டும் பயணத்தை தொடங்கியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT