இந்தியா

நிதிஷ் குமார், புதிய அமைச்சரவைக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து!

ஒன்பதாவது முறையாக பிகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமார் மற்றும் அவரது புதிய அமைச்சரவைக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

புது தில்லி: ஒன்பதாவது முறையாக பிகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமார் மற்றும் அவரது புதிய அமைச்சரவைக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த பிகாா் முதல்வா் நிதிஷ் குமாா், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கைகோத்துக் கொண்டு முதல்வா் பதவியையும் தக்கவைத்துக் கொண்டாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிதிஷ்குமார், பாஜக ஆதரவுடன் மாலை முதல்வராக பதவியேற்றார்.

கடந்த 23 ஆண்டுகளில் 4-ஆவது முறையாக பாஜக கூட்டணிக்கு மாறி, 9-ஆவது முறையாக பிகார் முதல்வராக பதவியேற்றுள்ளார்.அவருக்கு ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எக்ஸ் வலைதள பக்கத்தில் நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "ஒன்பதாவது முறையாக பிகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமார்,துணை முதல்வராக பதவியேற்ற சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா மற்றும் அவரது புதிய அமைச்சரவைக்கு எனது வாழ்த்துகள்.பிகார் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என நம்புகிறேன் என ராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருந்த வாழ்த்து செய்தியில், பிகாரின் முதல்வராகவும், துணை முதல்வர்களாகவும் பதவியேற்ற நிதிஷ் குமார், சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.

பிகாரில் நிதிஷ் குமார் தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்காக எந்தக் தடைக்கல்லையும் விட்டுவைக்காது என்று  மோடி தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

“வண்டிய நிறுத்துங்க..!” மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்! பயணிகள் சாலை மறியல்!

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 8

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 7

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT