முகப்பு
இந்தியா

விவசாயிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்!

பிகாரில் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விவசாயிகளை சந்தித்து செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:11 PM
விவசாயிகளுடன் ராகுல் காந்தி பேச்சு
பகிர்:

பிகாரில் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விவசாயிகளை சந்தித்து செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார்.

கடந்த ஜனவரி 14-ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் நேற்று காலை பிகார் மாநிலத்துக்குள் நுழைந்தது.

பிகார் மாநிலத்தில் இரண்டாவது நாளாக அராரியா மாவட்டத்தில் இருந்து பயணத்தை தொடங்குவதற்கு முன்னதாக மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது புகைப்படத்துக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, பூர்ணியா மாவட்டத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளுடன் அமர்ந்து, அவர்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.