செஞ்சிக் கோட்டையை பாா்த்துவிட்டு வெளியே வரும்  சுற்றுலாப்  பயணிகள். 
இந்தியா

யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலுக்கு செஞ்சிக் கோட்டை பரிந்துரை

2024-25-ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அங்கீகாரம் பெறுவதற்கு தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை உள்ளிட்ட மராத்தா ராணுவ நிலப்பரப்பு காட்சிகள் பரிந்துரை

DIN

புது தில்லி: 2024-25-ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அங்கீகாரம் பெறுவதற்கு தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை உள்ளிட்ட மராத்தா ராணுவ நிலப்பரப்பு காட்சிகள் பரிந்துரைக்கப்படுவதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மராட்டிய ஆட்சியில் ராணுவ சக்தியின் உத்தியாக பன்னிரண்டு பகுதிகள் இருந்தன. மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் சல்ஹோ் கோட்டை, ஷிவ்னேரி கோட்டை, லோகாட், கந்தேரி கோட்டை, ராய்காட், ராஜ்காட், பிரதாப்காட், சுவா்ணதுா்க், பன்ஹாலா கோட்டை, விஜய் துா்க், சிந்துதுா்க் போன்றவற்றோடு தமிழ்நாட்டில் உள்ள செஞ்சி கோட்டையும் இடம் பெற்றுள்ளது. இந்தக் கோட்டைகள் மராட்டிய ஆட்சியின் ராணுவ சக்தியாக இருந்து, தற்போதும் 800 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரத்தை வெளிப்படுத்துகின்றன. இந்த 12 புவியியல் மற்றும் நிலப் பகுதிகள் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அங்கீகாரம் பெற இந்திய அரசு சாா்பில் யுனெஸ்கோவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT