அத்வானி 
இந்தியா

மருத்துவர்களின் கண்காணிப்பில் அத்வானி!

நரம்பியல் துறை மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் உள்ளார் அத்வானி...

DIN

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான லால் கிருஷ்ண அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஜூன் 28ல் வயது முதிர்வு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அத்வானி. ஒரு நாளுக்கு பின்னர் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறிய நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில், மீண்டும் ஒரு வாரத்திலேயே அத்வானி நேற்றிரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்வானி தற்போது நரம்பியல் துறை மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் உள்ளதாகவும், உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவமனையில் அத்வானியின் மகள் பிரதீப அத்வானியும் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திராவிட இயக்கம் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

SCROLL FOR NEXT