முகப்பு
இந்தியா

கோப்புகள் எல்லாம் இனி ஒடிய மொழியில் மட்டும்தான்! ஒடிஸா புதிய முதல்வர் ஆணை!

கோப்புகள் எல்லாம் ஒடிய மொழியில் எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் மோகன் மாஜீ.

Updated On : 5 ஜூலை, 2024 at 5:04 AM
முதல்வர் மோகன் சரண் மாஜீ.
பகிர்:

ஒடிஸா மாநிலத்தின் ஆட்சி அமைப்பில் ஒடிய மொழியின் பெருமைகளை புகுத்தும் வகையில், இனிமேல் அனைத்து கோப்புகளும் ஒடிய மொழியில் மட்டும்தான் இருக்கும் என்று முதல்வர் மோகன் சரண் மாஜீ, அதிகாரப்பூர்வமாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

லோக் சேவா பவனின் மூன்றாவது மாடியில் உள்ள முதல்வருக்கென நியமிக்கப்பட்ட அலுவலக அறையில் இருந்து தனது பணியைத் தொடங்கிய மோகன் சரண் மாஜீ , “தனக்கு முன் வைக்கப்படும் அனைத்து கோப்புகளும் ஒடிய மொழியில் மட்டுமே இருக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஒடிஸா முதல்வர் மோகன் சரண் மாஜீ கூறுகையில், “அரசு சம்பந்தமான அனைத்து வேலைகளும் ஒடிய மொழியில் மட்டுமே நடைபெறும். ஒடிய மொழியின் பயன்பாட்டை அதிகாரப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற மட்டங்களில் விரிவுபடுத்த தேவைப்பட்டால் ஒடிசா அலுவல் மொழிச் சட்டம் திருத்தப்படும்” என்று அவர் கூறினார்.

கடந்த ஜூன் 12 ஆம் தேதி முதல்வராக பதவியேற்ற மோகன் சரண் மாஜீ, முதல்வரின் அலுவலகம் தயார் ஆகாததால் மாநில விருந்தினர் மாளிகையில் இருந்து செயல்பட்டு வந்தார்.

ஒடிசா மாநில பணிப்பாய்வு தானியங்கி முறையின் மூலம் சில அதிகாரப்பூர்வ கோப்புகளை நீக்கினார் முதல்வர் மோகன் மாஜீ. இதுகுறித்து அவர் கூறுகையில், “இது குடிமக்கள் சேவைகளை வெளிப்படைத்தன்மையுடன் விரைவாக அகற்றுவதற்கான மின்னணு நிர்வாகத்தின் முன்முயற்சியாகும், மேலும் ஒடிய மொழியை பொதுவாகவும், தனிப்பட்ட முறையிலும் பரவலாகப் பயன்படுத்த தகுந்த தொழில்நுட்பத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →