நிர்மலா சீதாராமனுடன் ஆந்திர முதல்வர் சந்தித்தபோது.. 
இந்தியா

கூடுதல் நிதி தேவை: நிதியமைச்சரை சந்தித்த ஆந்திர முதல்வர்!

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு இந்த சந்திப்பு..

DIN

ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார்.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு நார்த் பிளாக்கில் நிதியமைச்சர் சீதாராமனை சந்தித்தார். அப்போது மாநிலத்தில் மத்திய அரசின் உதவி தேவைப்படும் பல்வேறு திட்டங்களையும் அவர் எடுத்துரைத்தார். மேலும், மாநிலத்தின் நிதித் தேவைகள் மற்றும் அதிகரித்த ஒதுக்கீட்டிற்கான கோரிக்கைக்கான காரணங்களையும் அவர் குறிப்பாணையை வழங்கினார்.

ராஜ்நாத் சிங்கை சந்தித்தபோது..

மாநில அரசின் தரவுகளின்படி, ஆந்திரத்தின் பொதுக்கடன் 2019-20ல் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 31.02 சதவீதத்திலிருந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் 2023-24 நிதியாண்டில் 33.32 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நாயுடுவின் கோரிக்கைகளில் முக்கியமானது, போலவரம் நீர்ப்பாசனத் திட்டத்திற்கான நிதி, பின்தங்கிய பகுதிகளுக்கு சிறப்பு உதவி மற்றும் புதிய தலைநகரான அமராவதியின் வளர்ச்சிக்கு ஆதரவு ஆகியவை ஆகும்.

ஆந்திரப் பிரதேசத்தைப் பிரித்ததிலிருந்து நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.

ஜே.பி. நட்டாவுடன் சந்திப்பு நிகழ்த்தியபோது

2024-25 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது மத்தியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அமைச்சர்கள் உடனிருந்தனர். மேலும் சந்திரபாபு நாயுடு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவையும் சந்தித்தார். முன்னதாக நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள்; ஹரித்வார் செல்கிறேன்: செங்கோட்டையன்

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

காரங்காடு படகு சவாரி ரத்து

SCROLL FOR NEXT