இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் முதலீடு செய்ய தாமதிப்பதாக ஓலா நிறுவனர் கருத்து பதிவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்தியாவுக்கு வரவிருப்பதாக தெரிவித்திருந்தார். இந்தியாவில் பிரதமர் மோடியைச் சந்தித்து, டெஸ்லாவின் இந்திய முதலீடுகள் குறித்து விவாதிக்கவிருப்பதாகக் கூறியிருந்தார்.
ஆனால், கடைசி நேரத்தில் பணிநிமித்தம் காரணமாக வருகைதர முடியாமல் போனதாக அறிவித்தார். இருப்பினும், சீனாவுக்கு சென்று சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ``டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகள் இந்தியாவைத் தொடர்பு கொள்ளாமல் இருப்பதை எதிர்பார்க்கவில்லை” என்று இந்திய வணிகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஓலா நிறுவனரான பவிஷ் அகர்வால் டெஸ்லாவின் இந்த செயல்பாட்டை விமர்சித்து, தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
பவிஷ் அகர்வால் தெரிவித்திருப்பதாவது, ``இது டெஸ்லாவுக்கான இழப்பு; இந்தியாவுக்கானது அல்ல. ஏனெனில் இந்தியாவில் மின்சார வாகனச் சந்தை வேகமாக வளர்ந்து வருவதால், பின்வரும் காலத்தில் டெஸ்லா வாய்ப்புகளை இழக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.