ஞானவாபி மசூதி | கோப்புப் படம் 
இந்தியா

ஞானவாபி மசூதி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

ஞானவாபி மசூதி வழக்கு விசாரணை ஆகஸ்ட் 12-க்கு ஒத்திவைப்பு

DIN

ஞானவாபி மசூதி வழக்கின் மீதான விசாரணையை ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மசூதி அமைந்திருக்கும் இடத்தில் சிவலிங்கத்தை தவிர்த்த நீர்நிலை பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு செய்வதற்கு வாரணசி மாவட்ட நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்த தொடரப்பட்ட வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி 2022-ல் நீர்நிலை பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது.

2023, டிசம்பர் 18-ம் தேதி தனது ஆய்வறிக்கையை வாரணசி நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தாக்கல் செய்த அறிக்கையில் மசூதி கட்டப்பட்ட நிலத்தில் முன்னர் இந்து கோயில் இருந்ததாக நிறுவியது.

உச்சநீதிமன்றம் நீர்நிலை பகுதியை துப்புரவு செய்ய அறிவுறுத்திய பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒளரங்கசீப்பின் 16-வது நூற்றாண்டில் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாகவும் ஞானவாபி நிலத்தை மீண்டும் கோயில் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர 1991-ல் வாரணசி நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டது.

ஆகஸ்ட் 2023-ல் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளும்போது அநேக இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT