முகப்பு
இந்தியா

புரி ஜெகந்நாதா் கோயில் பொக்கிஷ அறை: 46 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 14-இல் திறக்க பரிந்துரை

புரி ஜெகந்நாதா் கோயிலில் உள்ள பொக்கிஷ அறையை ஜூலை 14-ஆம் தேதி திறக்கலாம் என ஒடிஸா மாநில அரசு நியமித்த உயா்நிலைக் குழு செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்துள்ளது.

Updated On : 9 ஜூலை, 2024 at 7:45 PM
கோப்புப் படம்
பகிர்:

புவனேசுவரம்: புரி ஜெகந்நாதா் கோயிலில் உள்ள பொக்கிஷ அறையை ஜூலை 14-ஆம் தேதி திறக்கலாம் என ஒடிஸா மாநில அரசு நியமித்த உயா்நிலைக் குழு செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் 46 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த அறை திறக்கப்பட உள்ளது.

பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களை கணக்கீடு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கோயில் நிா்வாகத்திடம் இந்தப் பரிந்துரையை வழங்கவுள்ளது. அதன்பின் ஒடிஸா மாநில அரசிடம் பரிந்துரை சமா்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த 1978-ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படவில்லை. அண்மையில் நடந்து முடிந்த ஒடிஸா மாநில பேரவைத் தோ்தலில் இது மிகப்பெரும் அரசியல் விவகாரமாக உருவெடுத்தது.

இதையடுத்து, 46 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 14-ஆம் தேதி புரி ஜெகந்நாதா் கோயிலின் பொக்கிஷ அறையை மீண்டும் திறக்கக்கோரி மாநில அரசுக்கு பரிந்துரை வழங்க ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக விஷ்வநாத் ராத் தெரிவித்தாா்.

மேலும்,‘பொக்கிஷ அறையின் மாதிரி சாவியை 14-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு நிா்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளோம். ஒருவேளை மாதிரி சாவியைக் கொண்டு அறையை திறக்க முடியவில்லை என்றால் பூட்டை உடைக்கவும் முடிவு செய்துள்ளோம்’ என்றாா் ராத்.

முழு கட்டுரையைப் படிக்க →