முகப்பு
இந்தியா

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க செவ்வாய்க்கிழமை பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

Updated On : 9 ஜூலை, 2024 at 8:19 PM
பகிர்:

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க செவ்வாய்க்கிழமை பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்)12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

இதற்கிடையே திங்கள்கிழமை முழுவதும் 63,619 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 28,572 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.78 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →