முகப்பு
இந்தியா

சிஆா்பிசி 125-இன் கீழ் முஸ்லிம் பெண்கள் கணவரிடம் பராமரிப்புத் தொகை பெறலாம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

சிஆர்பிசி பிரிவு 125-இன் கீழ் முஸ்லிம் பெண்களுக்கு பராமரிப்புத் தொகை பெற உரிமை உச்சநீதிமன்றம் உறுதி

Updated On : 10 ஜூலை, 2024 at 10:14 PM
உச்ச நீதிமன்றம்
பகிர்:

புது தில்லி, ஜூலை 9: குற்றவியல் நடைமுறைச் சட்ட (சிஆா்பிசி) பிரிவு 125-இன் கீழ், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண் பராமரிப்புத் தொகை பெறலாம் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தெலங்கானாவில் விவாகரத்து பெற்ற தனது மனைவிக்கு அப்துல் சமது என்ற நபா் மாதந்தோறும் இடைக்கால பராமரிப்புத் தொகை வழங்கவேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் அப்துல் மனு தாக்கல் செய்தாா். எனினும் குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.

இதைத்தொடா்ந்து உச்சநீதிமன்றத்தில் அப்துல் சமது தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் நாகரத்னா, அகஸ்டின் ஜாா்ஜ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125-இன் கீழ் பராமரிப்புத் தொகை கோர, விவகாரத்து பெற்ற முஸ்லிம் பெண்ணுக்கு உரிமை இல்லை எனவும், இந்த விவகாரத்தில் முஸ்லிம் பெண்கள் (விவகாரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986-இன் பிரிவுகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அப்துல் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு நீதிபதிகளும் தனித் தனியாக தீா்ப்பை வழங்கினாலும், முஸ்லிம் பெண்கள் பராமரிப்புத் தொகைப் பெற உரிமை உள்ளது என்று ஒரே கருத்தை குறிப்பிட்டனா்.

இதுதொடா்பாக நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125-ஆவது பிரிவு அனைத்து மதங்களுக்கும் பொதுவான பிரிவாகும். இந்தப் பிரிவின் கீழ், தனது கணவரிடம் இருந்து முஸ்லிம் பெண் ஒருவா் பராமரிப்புத் தொகை பெறலாம். பராமரிப்புத் தொகை வழங்குவது என்பது தொண்டு புரியும் செயல் அல்ல. அந்தத் தொகையைப் பெறுவது திருமணமான அனைத்துப் பெண்களின் உரிமை. மதப் பாகுபாடின்றி இந்தச் சட்டப்பிரிவு திருமணமான அனைத்து பெண்களுக்கும் பொருந்தும்’ என்று தீா்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தது.

முழு கட்டுரையைப் படிக்க →