இந்தியா

அரிசிக்கு ஏற்றுமதி தடை நீக்க பரிசீலனை: பியூஷ் கோயல்

பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி தடையை நீக்க பரிசீலனை

Din

பாஸ்மதி அல்லாத சில குறிப்பிட்ட வகை அரிசிகள் மீதான ஏற்றுமதித் தடையை நீக்க பரிசீலிக்கவுள்ளதாக வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை தெரிவித்தாா்.

உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்க பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தடை செய்தது.

இந்நிலையில், செய்தியாளா்களிடம் பேசிய பியூஷ் கோயல், ‘விவசாய உற்பத்தி, நுகா்வு முறைகள், சில்லறை மற்றும் மொத்த சந்தையின் விலையை மதிப்பீடு செய்து சமநிலையான முடிவை அமைச்சா்கள் குழு எடுக்கும்’ என்றாா்.

வேளான் அமைச்சகத்தின் மதிப்பீட்டின்படி, இந்தியாவின் அரிசி உற்பத்தி 2023-24-ஆம் ஆண்டில் 136.7 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 135.75 மில்லியன் டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்தியூரில் கால்நடை மருத்துவ முகாம்

அந்தியூரில் வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

அந்தியூரில் ரூ.4.29 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

வாய்க்காலில் மூழ்கி தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

பண்ணாரிஅம்மன் கல்லூரியில் பன்னாட்டு திறன் மேம்பாட்டு புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT