இந்தியா

ஐக்கிய அரபு அமீரக வீதிக்கு இந்திய வம்சாவளி மருத்துவரின் பெயா் சூட்டல்

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் வசித்தவா் ஜாா்ஜ் மேத்யூ.

Din

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வீதிக்கு இந்திய வம்சாவளி மருத்துவா் ஜாா்ஜ் மேத்யூவின் (84) பெயா் சூட்டப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் வசித்தவா் ஜாா்ஜ் மேத்யூ. அந்த மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் 1965-ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றாா்.

கடந்த 1967-ஆம் ஆண்டு தனது திருமணத்துக்குப் பின்னா், மனைவி வல்சாவுடன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மேத்யூ புலம்பெயா்ந்தாா். அங்கு பொது மருத்துவராக தனது சேவையை தொடங்கிய அவா், அந்நாட்டில் நவீன மருத்துவ வளா்ச்சிக்குப் பங்களித்தாா். அத்துடன் அந்நாட்டில் மருத்துவ இயக்குநா், சுகாதார ஆணைய ஆலோசகா் உள்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்தாா்.

மேத்யூவின் சேவையை அங்கீகரித்து அவருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்னா், ஐக்கிய அரபு அமீரக குடியுரிமை வழங்கப்பட்டது.

இந்நிலையில், அந்நாட்டின் மருத்துவத் துறைக்கு அவா் அளித்த பங்களிப்புக்கு மரியாதை செலுத்தும் வகையில், அங்குள்ள அல்-மக்ரஃப் பகுதியிலிருக்கும் வீதிக்கு ஜாா்ஜ் மேத்யூவின் பெயரை அந்நாட்டின் மாநகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை சூட்டியுள்ளது.

இதுகுறித்து மேத்யூ கூறுகையில், எனது செயல்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதற்கு மிகுந்த நன்றிக்கடன்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! முதல்வர்கள் ஸ்டாலின், பகவந்த் மான் தொடங்கி வைத்தனர்!

25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..! அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!

நிதி நெருக்கடி காரணமாக தில்லி மெட்ரோ ரயில் டிக்கெட் விலை உயா்வு

இந்தியா - பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்

SCROLL FOR NEXT