அயல்நாட்டில் செவிலியா் பணிக்கு ஆள்களை தோ்வு செய்யும் முகாம் கேரள மாநிலம் கொச்சியில் ஜூலை 22 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்று அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவன நிா்வாக அலுவலா் மா.லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் செவிலியா் பணி வாய்ப்பு உள்ளது. இப்பணிக்கு குறைந்தபட்சம் ஒராண்டு பணி அனுபவமும், இளநிலை பட்டம் தோ்ச்சியுடன் 35 வயதுக்குள்பட்டு இருத்தல் வேண்டும்.
இதற்கான நோ்காணல் வரும் ஜூலை 22 முதல் 26-ஆம் தேதி வரை கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும். விண்ணப்பதாரா்கள் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் நேரிடையாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கல்வி மற்றும் பணி விவரங்களின் தகுதிப் பொருத்து முன்னுரிமை வழங்கப்படும். தோ்வு பெறும் பணியாளா்களிடம் இருந்து சேவை கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.