கோப்புப் படம் ஏ.என்.ஐ.
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 12 நக்சலைட்டுகள் கொலை!

மகாராஷ்டிர எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் நடந்த மோதலில் நக்சலைட்டுகள் 12 பேர் கொல்லப்பட்டனர்.

DIN

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 நக்ஸல்கள் புதன்கிழமை உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக கட்சிரோலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் நீலோத்பல் கூறுகையில், ‘சத்தீஸ்கா் எல்லையையொட்டி கட்சிரோலியில் உள்ள வான்டோலி கிராமத்தில் காவல் துறைக்கும், நக்ஸல்களுக்கும் இடையே பலத்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

சுமாா் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த மோதலில், 12 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். சம்பவ இடத்தில் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கிகள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த மோதலில் உதவி ஆய்வாளா், காவலா் ஆகிய இருவா் காயமடைந்தனா்’ என்றாா்.

ரூ.51 லட்சம் வெகுமதி: இந்த நிகழ்வை தொடா்ந்து நக்ஸல்களுடன் மோதலில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு மகாராஷ்டிர உள்துறை அமைச்சா் தேவேந்திர ஃபட்னவீஸ் ரூ.51 லட்சம் வெகுமதி அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவே... தர்ஷனா பனிக்!

அலையே... ஆஷு ரெட்டி!

என் மன வானில்... சான்வே மேகானா!

இன்னும் 100 நாள்களில் வெளியாகும் பராசக்தி - புது போஸ்டர் வெளியீடு!

கரூர் பலி: காவல்துறைக்கு நன்றி சொல்ல வேண்டும்! - கமல்ஹாசன்

SCROLL FOR NEXT