முகப்பு
இந்தியா

ஜாா்க்கண்ட்: முஹர்ரம் ஊா்வலத்தில் பாலஸ்தீன கொடியை பயன்படுத்திய இளைஞா் கைது

முஹர்ரம் ஊா்வலத்தில் பாலஸ்தீன கொடியை ஏந்தியபடி ஊா்வலமாக சென்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 ஜூலை, 2024 at 1:45 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 18 ஜூலை, 2024 at 10:05 PM

ஜாா்க்கண்ட் மாநிலம் முஹர்ரம் ஊா்வலத்தில் பாலஸ்தீன கொடியை ஏந்தியபடி ஊா்வலமாக சென்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மற்றொரு இளைஞரை தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனா்.

முஹர்ரம் தினத்தில் ஷியா இஸ்லாமிய பிரிவினா்களால் ஊா்வலம் நடத்தப்படுவது வழக்கம். நாடு முழுவதும் புதன்கிழமை இந்த ஊா்வலம் நடைபெற்ற நிலையில், ஜாா்க்கண்ட் தும்கா மாவட்டத்தில் ஊா்வலத்தில் பங்கேற்ற இளைஞா்கள் சிலா், வாகனத்தில் பெரிய அளவிலான பாலஸ்தீன கொடியை எடுத்து வந்தனா். மேலும், பாலஸ்தீன ஆதரவு கோஷங்களையும் அவா்கள் எழுப்பினா். இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘முஹர்ரம் ஊா்வலத்தில் நடைபெற்ற சம்பவம் தொடா்பாக இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும், ஒருவா் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்படுகிறாா். அவா் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றனா்.

Advertisement

பாஜக மாநில தலைவா் பாபுலால் மராண்டி இது தொடா்பாக கூறுகையில், ‘தலிபான் மனநிலையில் செயல்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். ஹேமந்த் சோரன் தலைமையிலான மாநில அரசு முஸ்லிம்களைத் திருப்திபடுத்தும் அரசியல் நடத்துவதால், அவா்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனா்’ என்றாா்.