ரயில்வே துறையில் பல்வேறு தொழில்நுட்பப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், ரயில்வே துறை பலவீனமாகிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (ஜூலை 21) குற்றம் சாட்டினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் இருந்து தில்லிக்கு புறப்பட்ட ரயில் சனிக்கிழமை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதேபோன்று இதற்கு முன்பு, உத்தரப் பிரதேசத்தின் கோண்டா சந்திப்பு ரயில் நிலையம் அருகே சண்டீகா் - திப்ரூகா் (அஸ்ஸாம்) விரைவு ரயில் வியாழக்கிழமை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இவ்வாறு ரயில் விபத்துகள் தொடர்கதையாகிவரும் நிலையில், இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, ரயில்வே துறை பலவீனமாகிவிட்டதன் காரணமாக ரயில் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. முக்கியமான தொழில்நுட்ப இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால், ரயில்வே துறை இயல்பாகவே பலவீனமாகிவிடும். தற்போது ரயில்வே துறை மிகவும் பலவீனமான நிலையில் உள்ளதால், அடுத்தடுத்து ரயில் விபத்துகள் அரங்கேறி வருகின்றன. ரயில்வேக்கு சரியான நேரத்தில் நிதி வந்து சேருவது இல்லை.
ரயில்வேயை நிதித் துறையில் இணைக்காதபோது, தாங்களாகவே செயல்பட்டு, தங்களுக்கு ஏதாவது தேவைப்படும்போது, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் ரயில் விபத்தில் இறக்கின்றனர். இது குறித்து அரசு பரிசீலிக்கவில்லை என்றால் மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என கார்கே குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.