முகப்பு
இந்தியா

பட்ஜெட்: கல்வி, திறன் மேம்பாட்டுக்கு ரூ. 1.48 லட்சம் கோடி!

மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிர்மலா சீதாராமன்.

Updated On : 23 ஜூலை 2024, 11:21 am IST
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - sansad
பகிர்:

மத்திய பட்ஜெட்டில் கல்வி, திறன் மேம்பாட்டுக்கு ரூ. 1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.

ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் என்ற 4 இலக்குகளை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்த பட்ஜெட்டில், கல்வி, திறன் மேம்பாட்டு சிறு, குறு தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், 4.1 கோடி இளைஞர்களுக்கு 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கல்வி, திறன் மேம்பாட்டுக்கு ரூ. 1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments