குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு 
இந்தியா

பட்ஜெட்: குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2024-25 இன்று காலை தாக்கல் செய்யப்படவுள்ளது.

DIN

நாடாளுமன்றத்தில் இன்று காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அவருடன் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளும் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.

மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தொடர்ந்து 7ஆவது முறையாக நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், கடந்த மார்ச் மாதம் 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில், முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யவுள்ளார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிர்மலா சீதாராமனுக்கு திரெளபதி முர்மு இனிப்பு ஊட்டினார்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்துக்கு சென்ற நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? இட்லி கடை - திரை விமர்சனம்

இதயப்பூர்வம்... மடோனா செபாஸ்டியன்!

விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? - செந்தில் பாலாஜி விளக்கம்!

மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல்: செந்தில் பாலாஜி விளக்கம்!

தேரே இஷ்க் மெய்ன் டீசர்!

SCROLL FOR NEXT