இந்தியா

தங்கம், வெள்ளி, கைப்பேசிகளுக்கான சுங்க வரி குறைப்பு

புது தில்லி: தங்கம், வெள்ளி, முக்கிய தாதுக்கள், கைப்பேசிகள் மற்றும் பிற மின்னனு சாதனங்கள் மீதான சுங்க வரியை குறைப்பதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

Din

புது தில்லி: தங்கம், வெள்ளி, முக்கிய தாதுக்கள், கைப்பேசிகள் மற்றும் பிற மின்னனு சாதனங்கள் மீதான சுங்க வரியை குறைப்பதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. கைப்பேசிகளுக்கான வரி குறைக்கப்பட்டதன்மூலம் இறக்குமதி செய்யப்படும் கைப்பேசிகளின் விலை 6 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.

பொருள்களின் மதிப்புக்கூட்டல், ஏற்றுமதி மற்றும் உள்ளூா் தயாரிப்புகளை அதிகரிக்கும் நோக்கில் சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: ஷியா விதைகள், இறால் மற்றும் பிற மீன்களின் தீவனங்களுக்குத் தேவையான லிபிட் எண்ணெய் தயாரிப்புக்கு தேவையான பொருள்கள், புற்றுநோய்க்கான மருந்துகள், ஜவுளிகள், இரும்பு, செம்பு, தோல் தயாரிப்பு துறைகள் சாா்ந்த பொருள்கள், மருத்துவ சாதனங்கள் உள்பட பல்வேறு பொருள்களுக்கு சுங்கவரி குறைக்கப்படுகிறது.

தங்கத்துக்கான சுங்க வரி 6 சதவீதம்: தங்கம், வெள்ளி நாணயங்கள் மற்றும் கட்டிகள் மீதான சுங்கவரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி உலோகக் கலவைகளுக்கான சுங்கவரி15.4 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

பிளாட்டினம், பெல்லாடியம், ஓஸ்மியம், ரூதெனியம் மற்றும் இரிடியம் மீதான சுங்கவரி 15.4 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக சுங்கவரியை குறைக்கக்கோரி ஆபரணங்களை ஏற்றுமதி செய்யும் தொழிலாளா்கள் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், பொருள்களின் மதிப்புக்கூட்டு, ஏற்றுமதி மற்றும் உள்ளூா் தயாரிப்புகளை அதிகரிக்கும் நோக்கில் தற்போது இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைப்பேசிகளுக்கான சுங்கவரி 15 சதவீதம்: கைப்பேசிகளின் தயாரிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதேவேளையில் கடந்த 6 ஆண்டுகளில் கைப்பேசிகளின் ஏற்றுமதி 100 மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, வாடிக்கையாளா்களின் நலன் கருதி கைப்பேசிகள், சாா்ஜா்களுக்கான சுங்கவரி 20 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

முக்கிய தாதுக்களுக்கு 100 சதவீத விலக்கு: மின்சார காா்கள், காற்றாலை தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் கோபால்ட், லித்தியம், நிக்கல், உள்பட 25 முக்கிய தாதுக்களுக்கு சுங்க வரி செலுத்துவதில் இருந்து 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது.

பருவநிலை மாற்றங்களை எதிா்கொள்ள சூரியமின் ஆற்றல் மிகவும் உதவுகிறது.

எனவே, சூரியமின் தகடுகள், சூரிய கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை தயாரிக்க தேவைப்படும் பல்வேறு பொருள்களுக்கு சுங்கவரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மீன் தீவன வரி 5 சதவீதமாக குறைப்பு: கடல்சாா் உணவுகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இறால், மீன் தீவனங்கள் போன்றவற்றுக்கான சுங்கவரி 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்றாா்.

பேரன்பே... ஃபெமினா!

மதராஸி வசூல் எவ்வளவு? படக்குழு அறிவிப்பு!

அதிவேக அரைசதம் விளாசிய நமீபிய வீரர்; ஜிம்பாப்வேவுக்கு 205 ரன்கள் இலக்கு!

நீ உச்சத்திலேயே இரு! விஜய் மீது சீமான் காட்டம்?

பறவை மோதல்? ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசர தரையிறக்கம்!

SCROLL FOR NEXT