சாக்லேட்டுடன் மாயாதேவி குப்தா. படம் | X
இந்தியா

பிறந்தநாள் விழாவில் கொடுத்த சாக்லேட்டில் பல் செட்!

மத்திய பிரதேசத்தில் பிறந்தநாள் விழாவில் கொடுத்த சாக்லேட்டில் பல் செட் இருந்ததால் அதிர்ச்சி.

DIN

மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கொடுத்த சாக்லேட்டில் பல் செட்டின் 4 பற்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள கார்கோனில் உள்ள அரசு சாரா நிறுவனத்தில் தன்னார்வத் தொண்டு செய்யும் ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியையான மாயாதேவி குப்தா சமீபத்தில் பிறந்தநாள் விழா ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அங்கே கொடுத்த சாக்லேட்டை வீட்டிற்கு கொண்டுவந்துள்ளார். அங்கு ஒரு மாணவரிடமிருந்து பெற்ற காபி சுவை கொண்ட சாக்லேட்டை சாப்பிட்டுள்ளார். 3 நாட்களுக்கு பிறகு அந்த சாக்லேட்டை சாப்பிடுவதற்காக கடித்த போது அவரால் கடிக்க முடியவில்லை.

ஒரு பிரபலமான பிராண்டின் சாக்லேட்டை சாப்பிட்டவுடன், அவருக்கு சாக்லேட்டை மெல்லுவதற்கு கடினமாக இருந்துள்ளது. அதை வெளியே எடுத்து பார்த்த போது ஒரு பல்செட்டின் 4 பற்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உணவு பாதுகாப்புத் துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் சாக்லேட் கடையில் இருந்து மாதிரிகளை சேகரித்து அவற்றை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகிறது.

கடந்த மாதம், ஆர்டர் செய்யப்பட்ட ஹெர்ஷேயின் சாக்லேட் சிரப் பாட்டிலில் இறந்த எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதே மாதத்தில், மும்பையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சாப்பிட்ட ஐஸ்கிரீமில் துண்டாக்கப்பட்ட மனித விரலைக் கண்டறிந்தார். விசாரணையில், விரலின் மரபணு அறிக்கையில் புனே தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவரின் விரல் என்பதை உறுதிப்படுத்தியது. தொழிலாளி ஸ்காட்ச் நசுக்கும் இயந்திரத்தில் பணிபுரியும் போது கைவிரல் வெட்டுப்பட்டு ஐஸ்கிரீமில் விழுந்துள்ளது. இதேபோல குஜராத்தின் ஜாம்நகரில் குழந்தைகளுக்காக வாங்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் இறந்த தவளை இருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்கா எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

SCROLL FOR NEXT