வீரர்களுக்கு தேசம் தலைவணங்குகிறது: கார்கில் விழாவில் பிரதமர் மோடி பேச்சு
வீரர்களுக்கு தேசம் தலைவணங்குகிறது என கார்கில் விழாவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு இந்த தேசம் தலைவணங்குகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
கார்கில் விஜய் திவாஸ் விழாவில் கலந்து கொண்டு போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.
இந்த விழாவில் பேசிய மோடி, “நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் கடன் பட்டிருக்கிறோம்.
Advertisement
Advertisement
தீய நோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி ஒடுக்கப்படுவார்கள்.
இந்தியா மீதான தாக்குதல்கள் இன்றும் மறைமுகமாக தொடர்ந்து வருகிறது” என்றார்.
கார்கில் பயணத்தின் ஒரு பகுதியாக ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 4.1 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப்பாதையாக ஷின்குன் லா சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.