முகப்பு
இந்தியா

செருப்புத் தைக்கும் தொழிலாளியைச் சந்தித்துப் பேசிய ராகுல்!

கடின உழைப்பாளிகளின் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்..

Updated On : 26 ஜூலை 2024, 6:39 pm IST
செருப்புத் தைக்கும் தொழிலாளியுடன் ராகுல்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூரில் சமூகத்தின் பிரச்னைகளைப் புரிந்துகொள்வதற்காக செருப்புத் தைக்கும் தொழிலாளியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான அவதூறு கருத்துகள் தொடர்பான வழக்கில் சுல்தான்பூரில் உள்ள எம்பி-எம்எல்ஏ நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுல்தான்பூரில் உள்ள செருப்புக் கடையில் ராகுல் காந்தி தனது காலணியைத் தைக்கும்போது தலித் தொழிலாளியிடம் சுமார் 30 நிமிடங்கள் கலந்துரையாடினார். அதன் விடியோ பதிவு வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

தலித் தொழிலாளியுடன் ராகுல்

இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

கடின உழைப்பாளிகளின் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம், அவர்களுக்காக நாடாளுமன்றம் வரை குரல் எழுப்புவோம்.

செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் ராகுல்

அவர்களின் நிகழ்காலம் பாதுகாப்பாகவும், எதிர்காலத்தை வளமாகவும் மாற்றுவதே எங்களின் நோக்கமாகும் என்று ராகுல் தெரிவித்துள்ளதாக எக்ஸ் பதிவில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments