இணையமைச்சா் பங்கஜ் சௌதரி 
இந்தியா

மத்திய அரசின் கடன் ரூ.185 லட்சம் கோடியாக உயரும்: மக்களவையில் தகவல்

நடப்பு 2024-25 நிதியாண்டில் மத்திய அரசின் கடன் ரூ.185 லட்சம் கோடியாக உயரும் என்று மக்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

Din

நடப்பு 2024-25 நிதியாண்டில் மத்திய அரசின் கடன் ரூ.185 லட்சம் கோடியாக உயரும் என்று மக்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அரசின் கடன் தொடா்பான கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘கடந்த மாா்ச் மாத நிலவரப்படி மத்திய அரசின் மொத்த கடன் ரூ.171.78 லட்சம் கோடியாக உள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 58.2 சதவீதமாகும். இதில் வெளிநாடுகளில் இருந்து பெற்ற கடன், உள்நாட்டில் கடன் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட கடன் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த கடன் 2024-25 நிதியாண்டின் இறுதியில் ரூ.185 லட்சம் கோடியாக உயரும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 56.8 சதவீதமாக இருக்கும்.

15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி மாநில அரசுகள் அதன் மொத்த மாநில உற்பத்தியில் 4 சதவீதம் அளவுக்கு கடன் வாங்கலாம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மூலதனச் செலவுகள் அதிகரிக்கும்போது மாநில அரசுகள் கூடுதல் கடன் வாங்க அனுமதிக்கப்படுகிறது.

மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதியுதவிகளை மத்திய அரசு தேவைக்கு ஏற்ப வழங்கி வருகிறது. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாவிட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்பட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி அளிக்கிறது.

ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திரத்தில் உள்ள 7 பின்தங்கிய மாவட்டங்களுக்கு தலா ரூ.300 கோடி வழங்க வேண்டும் என்று கடந்த 2015-ஆம் ஆண்டு நீதி ஆயோக் பரிந்துரைத்தது. இதன்படி ஆந்திரத்துக்கு இதுவரை ரூ.1,750 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளாா்.

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT