அரிசி | கோப்புப் படம் dot com
இந்தியா

நமீபியாவிற்கு 1,000 டன் அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி!

தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் நமீபியாவுக்கு 1,000 டன் அரிசியை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

DIN

புதுதில்லி: தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் நமீபியாவுக்கு 1,000 டன் அரிசியை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பதற்காக ஜூலை 20, 2023 முதல் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதி தடை செய்யப்பட்டிருந்தாலும், கோரிக்கையின் அடிப்படையில் சில நாடுகளுக்கு அவர்களின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசு வழங்கிய அனுமதியின் அடிப்படையில் ஏற்றுமதி அனுமதிக்கப்படுகிறது.

தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் நமீபியாவுக்கு 1,000 மெட்ரிக் டன் வெள்ளை அரிசி ஏற்றுமதி அனுமதிக்கப்படுகிறது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

வெள்ளை அரிசி ஏற்றுமதி ஏப்ரல் - மே மாதங்களில் 12.27 கோடி அமெரிக்க டாலராகவும், 2023-24 முழுவதும் 85.253 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.

நேபாளம், கேமரூன், கோட் டி ஐவரி, கினியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இது போன்ற ஏற்றுமதியை இந்தியா இதற்கு முன்பு அனுமதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழிவாங்குவது கீழ்மையான போக்கு! - மெட்ரோ விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

வாய்ப்புகள் காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT