சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவை வழங்கிய ஊழியரை ரயில் பயணி ஒருவர் அறைந்த சம்பவம் தொடர்பான விடியோ வைரலாகி வருகிறது.
ஹவுராவிலிருந்து ராஞ்சிக்கு ரயில் சென்ற வந்தே பாரத் ரயிலில் முதியவ ஒருவர் கடந்த ஜூலை 26ஆம் தேதியில் பயணித்துள்ளார். ரயிலில் முதியவருக்கு, சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவை வழங்கியுள்ளார் ரயிலில் பணிபுரியும் ஊழியர்.
உணவுப் பொட்டலத்தின்மேல் அசைவம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், அந்த முதியவர் அதனைப் படிக்காமல், உணவினை சாப்பிட்டுள்ளார். சுவை தெரிந்தவுடன், தனக்கு அளிக்கப்பட்டது அசைவ உணவு என்று அறிந்த முதியவர், உணவளித்த ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஊழியரின் கன்னத்தில் இரண்டு முறை அறைந்தும் உள்ளார்.
இதனால், சற்றுநேரத்தில் ரயிலில் இருந்த பயணிகள் சிலர் ஒன்றுகூடி, பிரச்னையை தடுக்க முன்வந்துள்ளனர். இருப்பினும், முதியவர் அமைதி அடையவில்லை. இதனையடுத்து, முதியவர் அந்த ஊழியரிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்று பலரும் வற்புறுத்தியுள்ளனர்.
பயணிகளில் ஒருவர் முதியவரின் தலையின் பின்புறத்தில் கையால் அடித்து, மன்னிப்பு கோருமாறு கூறியுள்ளார். இந்த சம்பவம் முழுவதையும் உடனிருந்த பயணி ஒருவர் விடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது அந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விடியோவை பார்த்த பலரும், முதியவரின் செயலுக்கு எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். உணவுப் பொட்டலத்தின்மேல் அசைவம் என்று குறிப்பிட்டதைப் பார்க்காதது, முதியவரின் தவறு என்றும், மேலும், ஊழியரைத் தாக்கியதும் குற்றம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இன்னும் சிலர், ஊழியரை முதியவர் தாக்கியதும் குற்றம், முதியவரின் தலையில் வேறொருவர் அடித்ததும் குற்றம் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.