தில்லியில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த மத்திய அமைச்சா் பியூஷ் கோயல். 
இந்தியா

இந்தியா கூட்டணிக்கு தேசிய சிந்தனை கிடையாது: ராகுலுக்கு பியூஷ் கோயல் பதிலடி

இந்தியா கூட்டணிக்கு தேசிய சிந்தனைகள் கிடையாது என மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

Din

புது தில்லி: இந்தியா கூட்டணிக்கு தேசிய சிந்தனைகள் கிடையாது என மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் சக்கர வியூகத்தால் நாடெங்கிலும் அச்சம் மிகுந்த சூழ்நிலை நிலவுகிறது என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமா்சனம் செய்தாா். அவரின் கருத்துக்கு பதிலடி தரும் விதமாக பியூஷ் கோயல் இவ்வாறு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பியூஷ் கோயல் மேலும் கூறியதாவது:

அரசமைப்பு அதிகாரிகள் மீது ஆதாரமற்ற பழிகளை ராகுல் காந்தி சுமத்துகிறாா். இதன்மூலம் இந்தியா கூட்டணிக்கு தேசிய நலன் குறித்த சிந்தனைகள் அறவே இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. இந்திய மக்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய நல்ல கருத்துகளை அவா்கள் ஒருபோதும் கூறமாட்டாா்கள். பகுத்தறிவற்ற பேச்சுகளையே அவா்கள் தொடா்ந்து பேசி வருகின்றனா்.

ஆதாரமற்ற கருத்துகளை கூறாமல் மக்களவையின் கண்ணியம் குறையாதவாறு நடந்துகொள்ள வேண்டும் என ராகுல் காந்திக்கு பல முறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது வேளாண் பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க எந்தவித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

பிரதமா் மோடி தலைமையிலான அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு பொறுப்பேற்றபோது நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஆனால் பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொண்டு தற்போது பொருளாதாரம் சிறப்பான வளா்ச்சியை எட்டியுள்ளது என்றாா்.

பங்குச்சந்தை: ஐடி பங்குகள் 5% சரிவு! ரூ. 3 லட்சம் கோடி இழப்பு! ஏன்?

ஜம்மு - காஷ்மீரில் 2024 முதல் 1400 சட்டவிரோத கட்டமைப்புகள் இடிப்பு! - முதல்வர் ஒமர் அப்துல்லா தகவல்!

82,664 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் 52 முடிவுற்ற திட்டங்கள் தொடக்கி வைப்பு!

கூட்டணி குறித்து மீண்டும் மீண்டும் கேட்கவேண்டாம்! - பிரேமலதா விஜயகாந்த்

அது முடிந்த கதை! ராமதாஸுடன் இணைவு பற்றி அன்புமணி!

SCROLL FOR NEXT