புது தில்லி: ரூ.24,000 கோடி சிறப்பு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரள அரசு சார்பில் கடந்த மாதம் கோரியிருந்ததாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று, நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌதரி அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இன்று அளித்த பதிலில், ஆந்திர மாநிலம், மாநில தலைநகர் அமராவதி மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடி நிதி கோரியிருப்பதாகவும், பல்வேறு திட்டப் பணிகளுக்காக ரூ.17,144 கோடி கேட்டிருப்பதாகவும் அறிவித்தார்.
பிகார் மாநிலம், மாநில திட்டப் பணிகளை மேற்கொள்ள ரூ.785 கோடி கேட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுளள்து.
அதாவது, கேரள நிதியமைச்சர், கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதியிட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், கேரளத்துக்கு ரூ.24,000 கோடி சிறப்பு நிதியாக கோரியிருந்தது என்று மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.