`கடந்த 10 ஆண்டுகளை இந்திய ரயில்வே துறையின் பொற்காலம்’ என்று பாஜக எம்.பி. கூறியுள்ளார்.
புது தில்லியில் இன்று (ஜூலை 31) நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் ரயில்வே அமைச்சகத்திற்கான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடத்தப்பட்டது.
விவாதத்தின்போது பேசிய பாஜக எம்.பி. அனில் பலுனி, ``ரயில்வே துறை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது செயல்பட்டு வருகிறது.
ரயில்களைக் கனவு கண்ட பல பகுதிகளும், இப்போது ரயில் பாதைகளைக் கொண்டுள்ளன. நமது ரயில்களின் சராசரி வேகம், இப்போது மணிக்கு 80 கி.மீ. ஆகும்.
கடந்த ஆண்டில் மட்டும் 5000 கி.மீ. ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையில் மாபெரும் மகத்தான பணிகள் நடந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளும் இந்திய ரயில்வே துறையின் பொற்காலம் ’’ என்று தெரிவித்துள்ளார்.ரயில்களைக் கனவு கண்ட பல பகுதிகளும், இப்போது ரயில் பாதைகளைக் கொண்டுள்ளன. நமது ரயில்களின் சராசரி வேகம், இப்போது மணிக்கு 80 கி.மீ. ஆகும்.
கடந்த ஆண்டில் மட்டும் 5000 கி.மீ. ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையில் மாபெரும் மகத்தான பணிகள் நடந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளும் இந்திய ரயில்வே துறையின் பொற்காலம் ’’ என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.