இந்தியா

சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்களியுங்கள்: கேஜரிவால்

சர்வாதிகாரம் தோற்றுவிடும், ஜனநாயகம் வெல்லும்..

DIN

வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி வாக்களிக்குமாறு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களவைத் தோ்தலில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்டமாக பிரதமா் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முதல்வர் கேஜரிவால் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

இது மாபெரும் ஜனநாயக திருவிழா. நாடு முழுவதும் இன்று கடைசிக் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க அனைவரும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தி வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நீங்களும் வாக்களியுங்கள், உங்கள் அண்டை வீட்டாரையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். சர்வாதிகாரம் தோற்றுவிடும், ஜனநாயகம் வெல்லும் என்று பதிவிட்டுள்ளார்.

ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள கேஜரிவால் நாளை மீண்டும் நீதிமன்றத்தில் சரணடைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவரசம்... பாயல் ராஜ்பூத்!

ரெட் ஹாட்... நிதி அகர்வால்!

Online-ல போலீஸ் அழைப்பா? கவனமா இருங்க! இது Digital Arrest Trap!

விபத்துக்குள்ளான விஜய் தேவரகொண்டாவின் கார்!

விற்பனையில் சாதனை படைத்த மெர்சிடஸ் பென்ஸ்!

SCROLL FOR NEXT