மத்தியப் பிரதேசத்தில் தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே ஜூன் 15-க்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.
கேரளம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை கடந்த 30-ம் தேதி தொடங்கியுள்ளது. கேரளம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ஒரே நேரத்தில் பருவமழை தொடங்குவது மிகவும் அரிதானது. இதற்கு முன்பு 2017, 1997, 1995 மற்றும் 1991ல் இவ்வாறு நடந்துள்ளது.
போபால் மையத்தின் ஆய்வாளர் பிரமேந்திர குமார் கூறுகையில்,
மத்தியப் பிரதேசத்தில் பருவமழை ஜூன் 15-க்குள் தொடங்கும். இந்தப் பருவத்தில் மாநிலத்தில் இயல்பை விட அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் சராசரி மழையளவு 949 மிமீ ஆகும். கடந்தாண்டு ஜூன் 25-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் பருவமழை தொடங்கியது என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.