’கருத்துக்கணிப்பு அல்ல; மோடியின் கற்பனைக் கணிப்பு’ -ராகுல் காட்டம்
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை குறித்து ராகுல் காந்தி விமர்சனம்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி, மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்களுடன் இன்று(ஜூன் 2), அக்கட்சியின் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை குறித்து கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அவர் பேசியதாவது, “இது மோடியின் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு, இது மோடியின் கற்பனைக் கணிப்பு” என்று காட்டமாகப் பேசியுள்ளார்.
Advertisement
Advertisement
’இந்தியா’ கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பது குறித்து பேசிய ராகுல் காந்தி, “பாடகர் சித்து மூஸ் வாலாவின் ’295’ பாடலை மேற்கோள் காட்டி, 295 இடங்களில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.