சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் படம் | பிரேம் சிங் தமாங் எக்ஸ் தளம்
இந்தியா

சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் வெற்றி!

சிக்கிமில் 7,044 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் பிரேம் சிங் தமாங் வெற்றி பெற்றுள்ளார்.

DIN

சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தலுடன் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று(ஜூன் 2) காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதில், பெரும்பான்மை இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி(எஸ்கேஎம்) முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், சிக்கிம் முதல்வரும், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவருமான பிரேம் சிங் தமாங், தான் போட்டியிட்ட ரெனாக் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் சோம் நாத் பௌடியாலை விட 7,044 வாக்குகள் அதிகமாகப் பெற்று பிரேம் சிங் தமாங் வெற்றி பெற்றுள்ளார்.

ரெனாக் சட்டபேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பிரேம் சிங் தமாங் 10,094 வாக்குகளும், சோம் நாத்துக்கு 3,050 வாக்குகளும் கிடைத்துள்ளன.

சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிக்கும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, மீண்டும் ஆட்சியை தக்க வைக்கப்போவது உறுதியாகிவிட்டது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் பிரேம் சிங் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பார் என்று கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT