தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ் 
இந்தியா

டி-20 உலகக் கோப்பை, ஒலிம்பிக், விம்பிள்டன் போட்டிகளை ஒளிபரப்புகிறது தூர்தர்ஷன்!

தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் டி-20 உலகக் கோப்பை, பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் விம்பிள்டன் போட்டிகள் ஒளிபரப்பப்படும்

DIN

தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் டி-20 உலகக் கோப்பை, பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் விம்பிள்டன் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி இன்று (ஜுன் 3) அறிவித்துள்ளது.

பிரசார் பாரதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கௌரவ் திவேதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் டி-20 உலகக் கோப்பைக்காக சிறப்பு பாடலையும் பிரசார் பாரத் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பாரீஸ் நகரில் ஜுலை 26 முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகள் தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் ஜுலை 6 முதல் 14 வரை ஜும்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. தற்போது நடைபெற்றுவரும் டி-20 உலகக் கோப்பைக்குப் பிறகு இப்போட்டி நடைபெறுகிறது.

இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையே ஜுலை 27 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெறும் போட்டியையும் தூர்தர்ஷன் ஒளிபரப்பவுள்ளது.

இதேபோன்று பிரெஞ்சு ஓபன் மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரையும் ஒளிபரப்பவுள்ளது.

பிரசார் பாரத் நிறுவனம், விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் ஏஜென்ஸிகளுடன் மேற்கொண்ட மேம்பட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக இது நடந்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் நவ்நீத் குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைகீழாகக் கவிழ்ந்த தனியார் பேருந்து! பயணிகள் காயம்!

பொங்கலுக்கு விறுவிறுப்பாய் விற்பனையாகும் கொத்து மஞ்சள்!

தை பிறந்தால் வழி பிறக்கும்! பொங்கல் வாழ்த்து தெரிவித்த EPS

சபரிமலையில் இயக்குநர் ரத்னகுமார் இருமுடி கட்டி தரிசனம்!

இர்ஃபானின் வாகை சூட வா தொடரின் ஒளிபரப்பு நேரம்!

SCROLL FOR NEXT