அசோக் கெலாட் 
இந்தியா

பிரதமர் போட்டியிலிருந்து மோடி விலக வேண்டும்: அசோக் கெலாட்

பாஜக பெரும்பான்மை பெறாததால் மோடி விலக வேண்டும்: அசோக் கெலாட்

DIN

வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின்படி பாஜக பெரும்பான்மை பெறாததால் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருந்து நரேந்திர மோடி விலக வேண்டும் என முன்னாள் ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அசோக் கெலாட், “பாஜக தனித்து 370 தொகுதிகளிலோ தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளிலோ வெற்றி பெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. பாஜக அறுதி பெரும்பான்மை பெறவில்லை. ஆகவே மோடி, பிரதமருக்கான போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தேர்தல் முழுவதும் பிரதமர் மோடி பெரும்பாலும் அவரை மையப்படுத்தியே பிரசாரத்தில் ஈடுபட்டதாக அசோக் கெலாட் குறிப்பிட்டுள்ளார்.

மோடியின் வாக்குறுதி, மோடியின் ஆட்சி இப்படியான வாசகங்களையே மோடி பயன்படுத்தினார் எனவும் ஒட்டுமொத்த தேர்தலும் வேட்பாளர்களை தாண்டி பிரதமரின் வாக்குறுதி பெயராலேயே நடந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

பணவீக்கம், வேலையின்மை மற்றும் அதிகரிக்கும் சமூக பதற்றம் ஆகியவற்றை கடந்து மோடி மோடி என்பதையே கேட்க முடிந்ததாகவும் பிரதமர் தலைமையில் பாஜக ஆட்சி பெறும் எனத் தெரிவித்திருந்த தொகுதிகள் கிடைக்காததால் மோடி பிரதமர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிா்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் மீண்டும் முடக்கம் - பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

மனைவியுடனான சண்டைக்குப் பிறகு யமுனையில் குதித்த இளைஞா் உயிருடன் மீட்பு

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் 2 வாரத்தில் மேலும் 1 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை

தீ தடுப்பு விதிகளைப் பின்பற்றுவோம்!

SCROLL FOR NEXT