இந்தியா

அயோத்தி: முன்னிலையில் சமாஜ்வாதி, தொடர் பின்னடைவில் பாஜக!

அயோத்தி உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தொடர் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

DIN

உத்தரப் பிரதேசத்தில், அயோத்தி உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தொடர் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 543 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் அயோத்தி நகர் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியும் ஒன்று. அயோத்தியில் பாஜக முன்னிலை பெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலை 5.37 மணி நிலவரப்படி வெளியான வாக்கு எண்ணிக்கையில் சமாஜ்வாதி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

ஃபைசாபாத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 5,27,005 வாக்குகளும் பாஜக வேட்பாளர் லல்லு சிங் 4,72,222 வாக்குகளும் பெற்றுள்ளனர். 54,783 வாக்குகள் வித்தியாசத்தில் அவதேஷ் பிரசாத் முன்னிலையில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT