அயோத்தி உள்ள ஃபைசாபாத்தில் பாஜக தோல்வி!
சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி.
ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்துள்ளது.
அயோத்தி கோயிலை முன்னிலைப் படுத்தி நாடு முழுவதும் பாஜக பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அக்கோயில் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியிலேயே தோல்வியை சந்தித்துள்ளது.
பாஜக வேட்பாளர் லாலு சிங்கை விட 54,567 வாக்குகள் அதிகம் பெற்று சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றுள்ளார்.
Advertisement
Advertisement
பாஜக வேட்பாளர் லாலு சிங் - 4,99,722
சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் - 5,54,289
கடந்த ஜனவரி மாதம் அயோத்தி கோயிலில் பால ராமர் சிலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த அயோத்தி கோயில் விழாவை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் புறக்கணித்ததாக, மக்கள் மத்தியில் பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.