முகப்பு
இந்தியா

கங்கனா ரணாவத் 73 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!

மண்டி தொகுதியில் கங்கனா ரணாவத் 73 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில்

Updated On : 4 ஜூன், 2024 at 8:21 AM
அம்மாவிடம் ஆசி பெறும் கங்கனா ரணாவத்
பகிர்:

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள 4 மக்களவை தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது.

மண்டி தொகுதியில் போட்டியிட்ட பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் வெற்றிக்கு மிக அருகில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்யா சிங்கை காட்டிலும் 73,625 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

ஹமிர்பூரில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர், 1,71,348 தொகுதிகள் முன்னிலையில் உள்ளார்.

காங்ராவில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் டாக்டர் ராஜிவ் பர்த்வாஜ் 2,45,987 வாக்குகள் முன்னிலையிலும் ஷிம்லாவில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் குமார் காஷ்யப் 89,660 வாக்குகள் முன்னிலையிலும் உள்ளதாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →