நாசிக் : விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானம் !
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் சுகோய் போர் விமானம் இன்று விபத்துக்குள்ளானது.
மகாராஷ்டிரம் மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் சுக்கோய் போர் விமானம் இன்று (ஜூன் 4) விபத்துக்குள்ளானது.
நல்வாய்ப்பாக விமானியும் துணை விமானியும் உயிர் தப்பியதாக நாசிக்கின் சிறப்பு காவல் ஆய்வாளர் ரங்கே டி ஆர் கரேல் கூறியுள்ளார்.
ஷிரஸ்கான் கிராமத்தில் உள்ள நிலப் பகுதியில் விமானம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
போர் விமானத்தின் விங் கமாண்டர் பொக்கில் மற்றும் அவரது இரண்டாவது கமாண்டர் பிஸ்வாஸ் ஆகியோர் விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த போது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து நிஃபாத் டெஸிலில் உள்ள ஷிரஸ்கான் கிராமத்தின் பண்ணையில் பிற்பகல் 1.20 மணியளவில் விபத்துக்குள்ளானது. விமானிகள் சிறுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஹல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தின் உதிரிபாகங்கள் 500 மீட்டர் சுற்றளவுக்குப் சிதறிக் கிடப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த பகுதியை இந்திய விமான படையினர், ஹல் பாதுகாப்பு படையினர் மற்றும் ஹல் தொழில்நுட்ட குழுவினர் பார்வையிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.