கோப்புப் படம் 
இந்தியா

ஆந்திரத்தில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது தெலுங்கு தேசம்?

ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசக் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது

DIN

ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசக் கட்சி பேரவைத் தேர்தலின் பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால் ஆட்சியை அமைக்கவுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளான ஜனசேனை மற்றும் பாஜகவும் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தெலுங்கு தேசம் 130 தொகுதிகளிலும், ஜனசேனை 20 தொகுதிகளிலும், பாஜக ஏழு பேரவைத் தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. ஒய்எஸ்ஆர்சிபி தொடர்ந்து பின்னடைவில் உள்ளது.

தேர்தல் ஆணையம் தெரிவித்ததாவது, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆளுங்கட்சி ஒய்எஸ்ஆர்சிபி 18 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது; ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொகுதியில் 21,292 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். தெலுங்கு தேசக் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியில் 6832 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். பீத்தாபுரம் தொகுதியில் ஜனசேனை கட்சித்தலைவர் பவன் கல்யாண் 22,818 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

ஒய்எஸ்ஆர்சிபி அமைச்சர்கள் ஆர்.கே.ரோஜா, போட்சா சத்தியநாராயணன், சி.கோபாலகிருஷ்ணா, எஸ்.அப்பலராஜு, அம்பதி ராம்பாபு, வி.ரஜினி, டி.வனிதா, அமர்நாத் மற்றும் அம்ஜத் பாஷா ஆகியோர் பின்னடைவில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT